சரக்கு வேனில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது

சரக்கு வேனில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-29 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட குடிமைபொருள் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர், சோமசுந்தரம் தலைமையில் போலீசார் காரைக்குடி அருகேயுள்ள கழனி வாசல், பகுதியில் வாகன சோதனை நடத்தினர்..அப்போது அந்த வழியே வந்த 2 சரக்கு வேனை சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சரக்கு வேனில் கடத்தி வந்த 2,320 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேனில் வந்த மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கண்ணன் (52), சுரேஷ் (48,) சேவுகன் (47) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல் காரைக்குடி அருகேயுள்ள சூரக்குடி பகுதியில் நடத்திய சோதனையில் மினி லாரி ஒன்றில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த வேனில் வந்த சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியை சேர்ந்த ரகுபதி (51,) என்பவரை கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்