கள்ளக்குறிச்சி அருகே கொட்டகையில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே கொட்டகையில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-07 18:45 GMT


கள்ளக்குறிச்சி அருகே கீழ்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார், கீழ்குப்பம் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் 50 கிலோ எடை கொண்ட 60 சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி மூட்டைகளை விளம்பாவூரை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 21) என்பவர், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதனை சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்