ரேஷன் பாமாயில் பறிமுதல்; ஒருவர் கைது

ரேஷன் பாமாயில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-07 18:45 GMT

ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன், ஏட்டுகள் குமாரசாமி, முத்து கிருஷ்ணன், தெய்வேந்திரன் ஆகியோர் ஆர்.எஸ்.மங்கலம் அருகே முறுக்கு தயாரிப்பு கம்பெனியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரேஷன் பாமாயில் மூடை மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பாமாயில் 400 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த முறுக்கு சுடும் தொழிலாளி மகேசுவரனை(வயது 38) கைது செய்தனர். கம்பெனி உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்