தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொறையாறு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் ஆய்வு

தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட சுகாதார துறையினர் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் பொறையாறில் உள்ள கடைகளில் ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தநாதன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ராதாகிருஷ்னன், சீனிவாச பெருமாள், சுஜித்குமார், அருண், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

அபராதம்

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த சுகாதார துறையினர், கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.இதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்