சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்

சோலாடி சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-18 22:15 GMT

பந்தலூர்

கேரள மாநிலம் வயநாடு, வைத்திரி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என சோலாடி சோதனைச்சாவயில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்றது. சேரங்கோடு ஊராட்சி பணியாளர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா பயணிகளிடம் இருந்து நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிமேல் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதேபோல் சேரம்போடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்