பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
எஸ்.புதூர் அருகே பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே புழுதிபட்டி சத்திரம் கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் புழுதிபட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கடைகளில் தடைகளை மீறி விற்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள், விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள், காலாவதி நாள் குறித்து ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா அடுத்த அலையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி, முக கவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்து எடுத்துக்கூறினர். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, புழுதிபட்டி மருத்துவர் சுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சாத்தன், சேசாத்திரி, ஷேக் தாவுத், விக்னேஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்