மது பாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது

மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-05 19:40 GMT

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து, அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், அரியலூர் வாலாஜா நகரம் பகுதியை சேர்ந்த பிரேம்(வயது 30) என்பதும், தனது இருசக்கர வாகனத்தில் அரியலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்