பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

செஞ்சியில் பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-09-10 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் செஞ்சி கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பையில் 35 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரிந்தது. இருப்பினும் மதுபாட்டில்களை யார் கடத்தி வந்தார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்தது யார் என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்