அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-09-28 20:00 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் மற்றும் போலீசார் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் சாத்தூர் மேலஒட்டம்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (வயது 53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்