கிருஷ்ணகிரி மாவட்டத்தில்அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-22 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் ரோந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீசார் வரட்டனப்பள்ளி கீழ் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பட்டாசு கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 67 பட்டாசு பாக்சுகள் உரிய அனுமதியின்றி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஸ்ரீதரன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல அட்கோ போலீசார் பெங்களூரு -ஓசூர் சாலையில் கடை ஒன்றில் சோதனை செய்தனர். அங்கு அனுமதியின்றி 300 கிலோ அளவுக்கு, பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெங்கடேஷ் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் ஹரிபாபு என்பவரை தேடி வருகின்றனர்.

பட்டாசுகள் பறிமுதல்

ராயக்கோட்டையில் தக்காளி மண்டி அருகில் உள்ள பட்டாசு கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு அனுமதியின்றி 100 கிலோ அளவுக்கு பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாபு என்கிற அசேன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்