சேலம் வழியாக கேரளாவுக்குரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2023-09-05 20:22 GMT

சூரமங்கலம்

சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரெயில்களில் சோதனை

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது குட்கா, கஞ்சா செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பினு மற்றும் போலீசார நேற்று ரெயில்களில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா ரெயில் பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

கஞ்சா பறிமுதல்

இதையடுத்து அந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றை கோவை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்