திருப்புவனம்,
விருதுநகர் மாவட்டம் கரியனேந்தல் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜ் (வயது 28). இவர் திருப்புவனம் அருகே உள்ள கீழடி காமராஜர்புரத்தில் வசித்து வருகிறார். மணலூர் பாலம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, மானாமதுரை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 27 கிராம் எடையுள்ள 6 கஞ்சா பாக்கெட்டு இருந்தது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சோலைராஜாவை கைது செய்ததோடு கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.