திருமங்கலம்,
திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமப் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அழகுசிறையைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 42), பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (29) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரையும் சிந்துபட்டி போலீசார் கைது செய்து, 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.