தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல்

சீர்காழியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-12-22 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் பிடாரி வடக்கு வீதி, பிடாரி தெற்கு வீதி மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக விரைவில் மக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்