சிவகாசி,
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருத்தங்கல் அருகே கீழ வடபட்டி காளியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 3 மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து வேனுடன் 3 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து வேன் மற்றும் அரிசி உரிமையாளர் கோவில்பட்டி வில்லிசேரியைச் சேர்ந்த கொம்பையா (வயது 22), சுமை தூக்கும் தொழிலாளி மணி முருகன் (21), மதுரை தட்டப்பாறையைச் சேர்ந்த எட்டப்ப பாண்டியன் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.