விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 135 கிலோ ரேஷன் அரிசி 3 மூடைகளில் இருந்தது. ரேஷன் அரிசி மூடைகளை இருசக்கர வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ராஜசேகர் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.