2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-04 18:49 GMT


விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர்அருகே ஆவுடையாபுரம் முஸ்லிம் தெரு அருகில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ கொண்ட 37 மூடைகளிலிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசி மூடைகளை வைத்திருந்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதேபோன்று ஏழாயிரம்பண்ணையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை இருசக்கர வாகனத்துடன் கைப்பற்றிய போலீசார் அதுபற்றியும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூடைகளை வைத்திருந்தவர்கள் யார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்