15 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
15 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது;
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பெயரில் சிவகாசி அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனமும் இதனை தொடர்ந்து ஒரு வேனும் வந்தது. இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்தபோது வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வேனை போலீசார் சோதனையிட்டபோது அதில் தலா 50 கிலோ கொண்ட 15 மூடை ரேஷன் அரிசி இருந்தது. இருசக்கர வாகனத்தையும், வேனையும், 15 மூடை ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வேனில் இருந்த கோவில்பட்டி அருகே உள்ள விளாச்சேரியைச் கொம்பையா(22), வேன் டிரைவர் விளாச்சேரியைச் சேர்ந்த செல்லத்துரை(30), இருசக்கர வாகனத்தில் வந்த கோவில்பட்டி மறவர் காலனியை சேர்ந்த மந்திரமூர்த்தி மற்றும் ரேஷன் அரிசியை கொள்முதல் செய்த கோவில்பட்டியை சேர்ந்த பூல்பாண்டி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பூல்பாண்டியை தவிர மற்ற 3 பேரையும் கைது செய்தனர். பூல் பாண்டியை தேடி வருகின்றனர்.