100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-03-14 19:07 GMT

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ஒன்றியம் கே.புதுபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபட்டில் சென்ற ஒருவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் நம்பூரணிபட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்