புதரில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-23 18:25 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் அருகே வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதத்தொடர்ந்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று சோதனை செய்தார்.

அப்போது அரசனப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையெடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்