பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-27 18:31 GMT

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு கட்டேரி அருகே உள்ள தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு செல்கின்றனர். இதனால் நீண்ட தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருவதால் தாமலேரி முத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகள் ரேஷன் கடை அமைக்க இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அதிகாரிகள் அலுவலகத்திற்கு திரும்பி சென்றனர். அப்போது தாமலேரிமுத்தூர் அருகே உள்ள பாட்டாளி நகர் என்ற இடத்தில் இருந்த வைக்கோல் போரை சந்தேகத்தின் பெயரில் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர். அதில் வெளி மாநிலத்திற்கு கடத்த 27 மூட்டைகளில் 1010 கிலோ ரேஷன் அரிசியை வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் குறித்து விவரம் தெரியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் அடுத்த குனிச்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்