இளையான்குடி அருகே வீட்டில் பதுக்கிய 493 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

இளையான்குடி அருகே வீட்டில் பதுக்கிய 493 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-11 18:45 GMT


இளையான்குடியை அடுத்த மேலாயூர் பகுதியை சேர்ந்தவர் சமயதுரை (வயது 42). இவரது வீட்டில் ரேஷன் துவரம் பருப்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 493 கிலோ துவரம் பருப்பு 13 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து சமயதுரையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்