இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதன் பாதுகாப்பு பணிக்காக இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட்ெஜயின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகில் தாயமங்கலத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் ரத்தினம்(வயது41) என்பவா் மது விற்றுக் கொண்டிருந்தாா். அவா் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டாா். மேலும் அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 124 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனா். இதுசம்பந்தமாக தப்பியோடிய ரத்தினம் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனா்.