27 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

27 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-20 18:45 GMT

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க நகரசபை தலைவர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று ஆணையாளர் சுரேந்திரன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணகுமார், செல்லப்பாண்டி, மாரிமுத்து, ஸ்ரீஜேஸ்குமார் ஆகியோர் அரண்மனை, சாலை தெரு, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதும், விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சுமார் 27 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 14 கடைகளுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இந்த ஆண்டு இதுவரை பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக ரூ.43,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 3500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை காற்று மாசு ஏற்படாதவாறு அழிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்