தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பேரூராட்சிட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவங்கள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடசேன் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 9.30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.