புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தவர் மீது வழக்கு

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-20 18:08 GMT

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் தளவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மளிகை கடையில் தளவாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கரிகாலன் (வயது 52) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்