உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சட்டம் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உடன்குடியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சட்டம் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் உடன்குடி பஸ்நிலையம் முன்பு மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், நகர பொருளாளர் சக்திவேல், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், சமூக நல்லிணக்க பேரவை உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார், நகர அமைப்பாளர் செந்தில்குமார், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், சமூக நல்லிணக்க பேரவை உடன்குடி ஒன்றிய துணை அமைப்பாளர் ஹம்சா பாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்