கலைஞர் கோட்டகம் திறப்பை முன்னிட்டு மாநாடு

கலைஞர் கோட்டகம் திறப்பை முன்னிட்டு மாநாடு

Update: 2023-06-04 18:45 GMT

திருவாரூர் அருகே வருகிற 20-ந்தேதி கலைஞர் கோட்டகம் திறப்பதை முன்னிட்டு மாநாடு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டகம்

திருவாரூர் அருகே தி.மு.க. அறக்கட்டளை சார்பில் காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டகத்தை வருகிற 20-ந்தேதி பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அன்று அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் திறந்தவெளி மாநாடு நடைபெற உள்ளது.

3 அமைச்சர்கள் ஆய்வு

இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த மாநாட்டில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க பந்தல் அமைப்பாளர்களிடம் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும் கலைஞர் கோட்டகம் அருகில் மாநாடு நடைபெறும் இடத்தில் வெளியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர்கள் வருவதற்கான தனி வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுவதற்காக போலீஸ்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது தாட்கோ தலைவர் உ.மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்