குடிபோதையில் இருந்த பயணியை கீழே தள்ளிய கண்டக்டர் பணியிடை நீக்கம்
குடிபோதையில் இருந்த பயணியை கீழே தள்ளிய கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூருவில் இருந்து அவலூர்பேட்டை வழியாக வந்தவாசிக்கு வந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
வந்தவாசி பஸ் நிலையத்திற்கு பஸ் வந்ததும் பயணிகள் இறங்கிய நிலையில் குடிபோதையில் இருந்தவர் மட்டும் பஸ்சில் இருந்து இறங்கவில்லை. கண்டக்டர் அவரை இறங்குமாறு கூறிய நிலையில் தட்டு தடுமாறி இறங்க முயன்ற பயணியை மனிதாபிமானம் இல்லாமல் கண்டக்டர் பிரகாஷ் படிக்கட்டில் இருந்தவாறு கீழே தள்ளிவிட்டார்.
இந்த நிகழ்வு அங்கே பஸ்சுக்காக காத்திருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலானது. மேலும் இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து கண்டக்டர் பிரகாசை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டார்.