ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திண்டிவனம் அருகே பணியின்போது ஓடும் அரசு பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

Update: 2023-07-11 07:00 GMT

திண்டிவனம்

பெரம்பலூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஓட்டினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்த வரதராஜன்(வயது 53) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

திண்டிவனம் அருகே வந்தபோது கண்டக்டர் வரதராஜனுக்கு திடீரென நெஞ்சு வலியும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திாிக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் பயணிகள் வரதராஜனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அரசு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்