ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி

உளுந்தூா்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-16 18:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். செந்தில்குமாரிடம் சேர்ந்தநாடு கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்த நிலையில் ஏலச்சீட்டு முடிந்தும் ஆபிரகாம் பிரகாசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுக்காமல் செந்தில்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து ஆபிரகாம் பிரகாஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஆபிரகாம்பிரகாஷ் மட்டும் இல்லாமல் செந்தில்குமார் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மொத்தம் ரூ.50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்