உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல்: தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-11 22:55 GMT

சென்னை,

இன்று அதிகாலை (அதாவது நேற்று) காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உள்பட 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன்.

ரூ.20 லட்சம் நிதியுதவி

வீரமரணம் எய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்