விலைவாசி உயர்வை கண்டித்து ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீடு, கடை வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். பூந்துறை பாலு, சிவசுப்பிரமணி, முனனாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா என்கிற ராஜசேகர், பொன் சேர்மன், மாநகர பிரதிநிதி ஆஜம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜீவா ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், சூரியசேகர், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பெரியார் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரா.மனோகரன் செய்திருந்தார்.