எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்துஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தலைமை தாங்கி பேசினார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. பார்த்திபன், ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.