மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-12 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் மெயின் பஜார் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களிடம் அந்த நாட்டு அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் மீன்பிடிபடகு மற்றும் மீன் பிடி வலைகளை விரைவில் விடுவிக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட இளம் சிறுத்தை மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

மாவட்ட பொருளாளர் பாரி வள்ளல், மகளிர் மாவட்ட துணை செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் சொ.சு தமிழீனியன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்