மின் கட்டண உயர்வை கண்டித்து, கோபியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோபி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைவாணி தலைமை தாங்கினார். கோபி நகர தலைவர் சுரேஷ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதில் கட்சியின், மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.