மத்திய அரசுக்கு கண்டனம் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடந்தது

தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-15 20:12 GMT

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தி.மு.க.வினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவித்து இருந்தனர். அதன்படி தி.மு.க. ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்டங்களின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொது நுழைவுத்தேர்வு

ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் இந்தி திணிப்பை முயற்சிக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். ஒரே பொது நுழைவுத்தேர்வு நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், இந்து சமயஅறநிைலயத்துறை ஈரோடு மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் எல்லப்பாைளயம் சிவக்குமாா், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பி.கே.பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் பிரகாஷ், பவானி சேகர், மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம், கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், கட்சியின் முன்னாள் நகர செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்