மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஆட்டோ டிரைவர்கள் மனிதசங்கிலி
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் மனிதசங்கிலியில் ஈடுபட்டனா்.;
சிதம்பரம்,
மணிப்பூர் கலவரம் மற்றும் அங்குள்ள பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகே அனைத்து ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நேற்று காலை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இங்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பூவாலை பாண்டியன், முத்துகிருஷ்ணன், சுப்பு, விஜய், சிவா, இமயவர்மன், மோகன் உள்ளிட்ட ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கை கோர்த்து சாலையோரம் நின்றபடி, கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மணிப்பூரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.