மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் குகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டதையும் அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சசிகலா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள்கனகராஜ், ஜெகதீசன், ஓய்வு ஊதிய ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயப்ரகாஷ், நிர்வாகிகள் மோகனசுந்தரம், மோகனபிரகாஷ், தங்க வடிவேலன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.