சிறை சார்நிலை பணிகளுக்கான கணினி வழி தேர்வு

மயிலாடுதுறையில் சிறை சார்நிலை பணிகளுக்கான கணினி வழி தேர்வு நடந்தது, இதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-02 18:45 GMT

மயிலாடுதுறை மன்னம்பந்தல் தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான கணினி வழி தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு மையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருந்த வசதிகள், பாதுகாப்புகள் குறித்து கலெக்டர் கேட்டிருந்தார். அப்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்