பார்வையற்ற ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

Update: 2023-02-09 10:31 GMT

திருப்பூர்

தமிழ்நாடு சமக்ரக சிக்ஷா மற்றும் ஹோப் பவுண்டேசன் சார்பில் பார்வையற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சி நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று திருப்பூர் கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். சமக்ரக சிக்ஷா கூடுதல் திட்ட அதிகாரி அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.

பார்வை மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி தங்கள் கற்றல், கற்பித்தல் பணியை எளிமையாக செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே செல்போனை பயன்படுத்தி தங்கள் பணிகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக கணினியை எவ்வாறு தங்கள் வகுப்பறையில் பயன்படுத்தலாம் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 31 பார்வையற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஹோப் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியமேரி, அதிபன், முதன்மை கருத்தாளர் கஞ்சம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் வசந்தி, கருத்தாளர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி ஆசிரியை சுகன்யா ஆகியோர் பங்கேற்றார்கள். பயிற்சி வகுப்பு இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.


----

Tags:    

மேலும் செய்திகள்