பள்ளிக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா

ஆலிச்சிக்குடிபள்ளிக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2023-03-17 18:45 GMT

விருத்தாசலம்:

விருத்தாசலம் ஒன்றியம் ஆலிச்சிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஊராட்சி மன்றம் சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பிள்ளை பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அந்தோணிராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2 கம்ப்யூட்டர்களை வழங்கினார்.

இதில் சாஸ்தா குழுமம் வக்கீல் பழனிவேல், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்