கணினி மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கணினி மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர் சொந்தமாக கணினி மையம் நடத்தி வந்தார். இந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேகர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைக்கண்ட உறவினர்கள் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.