பணிக்கு வராத போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு

குமரியில் பணிக்கு வராத போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடியாக உத்தரவிட்டார்.

Update: 2023-03-29 18:45 GMT

நாகர்கோவில்:

குமரியில் பணிக்கு வராத போலீஸ்காரருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடியாக உத்தரவிட்டார்.

போலீஸ்காரர்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக சத்தியகுமார் பணியாற்றி வந்தவர் பணிக்கு வராமல், எந்தவொரு அனுமதியும் பெறாமல் விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

ஏற்கனவே சத்தியகுமார் இதுபோன்று செய்து வந்ததால் அவருக்கு 3 முறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போதும் அவர் பணிக்கு வராமல் இருந்ததால் மாவட்ட காவல்துறை சார்பில் அவருக்கு பல முறை பணி அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் பணிக்கு வரவில்லை.

கட்டாய ஓய்வு

இதன் காரணமாக காவலர் சத்தியகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சத்தியகுமாருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்று காவலர்கள் நீண்ட நாட்களாக பணிக்கு வராமலும், அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து வராமல் இருந்ததாலும் அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்