எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்படுமா?

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்படுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-10 18:39 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்படுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

உயா்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அரசால் கட்டப்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவியர்கள் அருகில் உள்ள மருதவனம், நேமம், வங்கநகர், நுணாகாடு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி ஒரு வயல் வெளிப்பகுதியில் உள்ளது. பள்ளிக்கு நீண்ட நாட்களாக சுற்றுச்சுவர் கட்டாமல் பள்ளி நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளியில் உள்ள பொருள்களுக்கு பாதுகாப்பு தன்மை குறைவாக உள்ளது.

விஷப்பூச்சிகள்

மேலும் வயல்வெளி பகுதியில் இருந்து விஷப்பூச்சிகள் பள்ளி பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரங்களில் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகள் பள்ளியை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கு உடனடியாக அரசு சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவ- மாணவியர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சுவர்

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியதாவது:-

எழிலூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான ஏழை மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் அங்கு படிக்கும் மாணவ மாணவியர்கள் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைத்தாலும் கூட பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டி பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாக கடமையாகும் மேலும் பள்ளி வயல்வெளி பகுதியில் இருப்பதால் மாணவ- மாணவிகள் பாதுகாப்புடன் கல்வி பயில அரசு உடனடியாக தலையிட்டு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்