வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கொடைக்கானல் கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.;

Update: 2022-07-12 17:16 GMT

கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 6-ந்தேதி தொடங்கியது. அதன்படி அந்த கோட்டத்தில் உள்ள பழனி வனச்சரகம் உள்பட 7 வனச்சரகங்களிலும் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அடர்ந்த வனப்பகுதியில் விலங்குகளின் கால்தடம், எச்சம், நேரடியாக பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கப்பட்டன. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக வனப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு விலங்குகள் கணக்கெடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்