நீலகிரியில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் - வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அனைத்து இடங்களிலும் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 வாரங்களில் டெண்டர் கோரி, அனைத்து இடங்களிலும் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.