சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறினார்.;

Update: 2023-10-17 20:42 GMT

விருதுநகர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் நாளை முதல் 24-ந் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும். இரவு காட்சி நள்ளிரவு 1:30 மணிக்கு முன்பு முடிக்க வேண்டும். மேற்படி சினிமா தியேட்டர்களில் காலை 9 மணிக்கு முன்பாக திரைப்படம் திரையிட அனுமதி இல்லை. சினிமா தியேட்டர்களில் நுழைவு கட்டணம் அதிகமாக வசூல் செய்வது போன்ற விதிமுறைகள்மீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை போலீஸ்சூப்பிரண்டு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோரிடம் தெரிவிக்கலாம். இதுகுறித்து புகார் ஏதேனும் இருந்தால் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் 94450 00475, சிவகாசி கோட்டாட்சியர் 94450 00474, சாத்தூர் கோட்டாட்சியர் 63745 59271, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) 94450 08161, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அருப்புக்கோட்டை 94981 89075, திருச்சுழி 98656 95944, விருதுநகர் 63790 47041, சிவகாசி 98847 41609, சாத்தூர் 98424 23228, ஸ்ரீவில்லிபுத்தூர் 94981 05360, ராஜபாளையம் 98842 15769 என்ற ெசல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்