மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சந்தனமேரிகீதா தலைமை தாங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகலீலா, தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் திண்டுக்கல் கிழக்கு தாலுகாவை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அப்போது வீட்டுமனை பட்டா, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பல்வேறு உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்டவை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனுக்களை கொடுத்தனர். மேலும் தேசிய அடையாள அட்டை கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் குழுவினர் மூலம் உடனுக்குடன் பரிசோதனை செய்யப்பட்டது.