ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பு கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் 18005995950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.